
கொவிட் 19 தொற்று கொத்தணி முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமின் கொவிட் 19 தொற்று கொத்தணி தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடாக பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 810 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்களில் 2 ஆயிரத்த 296 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் 503 கொவிட்19 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை, பாதுகாப்பு முகாம்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 720 பேர் இன்றைய தினம் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இதகமைய, வவுனியா - வேலங்குளம் வன்னி வான்படை முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில், வெற்றிகரமாக தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 165 பேர் அங்கிருந்து வீடுதிரும்பியுள்ளனர்.டுபாயில் இருந்து நாடுதிரும்பிய 165 பேரே 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்ததன் பின்னர் இவ்வாறு வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக வான்படை தெரிவித்துள்ளது.அவர்கள், கொழும்பு, களுத்துறை, காலி, அநுராதபுரம் முதலான பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இராணுவ மற்றும் கடற்படை முகாம்களில் உள்ள மத்திய நிலையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 555 பேர் இன்றைய தினம் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்இதற்கமைய 27 ஆயிரத்து 494 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்.அத்துடன் 3 ஆயிரத்து 102 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ ஊடாக பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.