பாவனைக்குதவாத அரிசியை மக்களுக்கு வழங்கிய முல்லைத்தீவு பிரதேச செயலகம்!

பாவனைக்குதவாத அரிசியை மக்களுக்கு வழங்கிய முல்லைத்தீவு பிரதேச செயலகம்!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு காலாவதியான பாவனைக்குதவாத அரிசி பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அரச மானியம் நிகழ்சி திட்டத்தின் கீழ் தற்போது மக்களுக்கு அரிசி பொதி வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்டு வாழும் மக்களுக்கும் அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பாவனைக்குதவாத அரிசியை மக்களுக்கு வழங்கிய முல்லைத்தீவு பிரதேச செயலகம்! | Mullaitivu Divisional Secretariat Unusable Rice

இவ்வாறு  மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி பொதியில் காலாவதி திகதி 2024.03.25 என அச்சிடப்பட்ட்டுள்ளது. அத்தோடு வழங்கப்பட்ட குறித்த பொதி அரிசியும் பழுதடைந்த நிலையிலையே இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் கூறுகையில், நேற்றையதினம் வழங்கப்பட்ட அரிசி பொதிகள் சில காலாவதியானதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

பாவனைக்குதவாத அரிசியை மக்களுக்கு வழங்கிய முல்லைத்தீவு பிரதேச செயலகம்! | Mullaitivu Divisional Secretariat Unusable Rice

அதனையடுத்து, அரிசி வழங்கப்பட்டவர்களின் தரவுகளை இன்றையதினம் பெற்று மீண்டும் அவர்களுக்கு தரமான அரிசி பொதிகள் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்ததாக கூறப்படுகின்ற்து. இந்நிலையில் காலவதியான அரிசி வழங்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளிட்யிட்டுள்ளனர்.