
பல பண மோசடி சம்பவங்கள்: நீக்கப்படும் இணையத்தளங்கள்
போலி இணையத்தளங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல (Charuka Damunupola) தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தின் இணையத்திற்கு இணையாக காணப்படும் இவ்வாறான போலி இணையத்தளங்களை நீக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான 5 போலி இணையத்தளங்களை இணையத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளங்களை பயன்படுத்தி 35 பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.