கனடா விசிட்டர் விசா தொடர்பில் வெளியான தகவல்!

கனடா விசிட்டர் விசா தொடர்பில் வெளியான தகவல்!

அண்மைக்கால தரவுகளின்படி கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில் பெருந்தொகையான இலங்கையர்கள் கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்றுள்ளனர்.

எனினும் தற்போது விசிட்டர் விசாவில் செல்வோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் விசிட்டர் விசா தொடர்பில் எந்த வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. தொடர்ந்தும் அந்த நடைமுறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் ஏற்கனவே கனடா சென்றவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் புதிதாக செல்ல தமிழர்கள் அச்சப்படுகின்றனர்.

கனடாவில் வேலைவாய்ப்பின்மை, வாடகை வீடுகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை இதில் முக்கியமாகும். பல கோடிகளை செலவு செய்து கனடா சென்ற தமிழர்கள் அங்கு வாழ முடியாது என்பதை உணர்ந்த நிலையில் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.

கனடா விசிட்டர் விசா தொடர்பில் வெளியான தகவல்! | Canada Visitor Visa New Update 2024 Tamil Peopleதமிழர்கள் மட்டுமன்றி பெருமளவு சிங்களவர்களும் கனடாவுக்கு விசிட்டர் விசாவில் படையெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.