கொரோனா வைரஸ் ஒருவரை 2 முறை தாக்குமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் ஒருவரை 2 முறை தாக்குமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் தாக்கியதன் பின்னர் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து, ஒருவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதா என்ற கேள்வி தற்போது சமூகத்தில் எழுந்துள்ளது.இது விஞ்ஞானிகளுக்கே இன்னும் உறுதியாக தெரியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இதே நேரம் கொரோனா மீண்டும் தாக்குவதற்கு சாத்தியம் இல்லை என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.இதையடுத்து சுகாதார வல்லுனர்கள் கூறுவது என்னவென்றால், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதுதான்ஆனால் இந்த எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் அவர்களுக்கு மீண்டும் கொரோனா தாக்குவதில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் அல்லது அந்த எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை என்கிறார்கள் சுகாதார வல்லுனர்கள்.இது குறித்து வல்லுனர்கள் சொல்லும்போது, மக்கள் ஒரே நோய்த்தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது பரிசோதனை அறிக்கைகள் தவறாக அமையலாம் என்கிறார்கள்.ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி என தெரியவந்த பின்னர், மற்றவர்களுக்கு தொற்றை பரப்பியதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்று எதுவும் இல்லை என்பதாகவும் இருக்கிறது. எனவே ஒருவருக்கு மீண்டும் கொரோனா வந்தால், அதை அவர் மற்றவர்களுக்கு பரப்பும் ஆபத்து இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.