
இராஜாங்கனை தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்ட இராஜாங்கணை பிரதேச செயலக பிரிவுக்கான தபால் மூல வாக்களிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
குறித்த தபால் மூலம் வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் 420 அரச அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.
இதேவேளை தேர்தல் வன்முறை தொடர்பில் 5,236 முறைப்பாடுகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறுவதுடன் தொடர்பானவை என அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 1,011 முறைப்பாடுகளும் 4,225 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.