வெளிநாடுகளில் இருந்து மேலும் 29பேர் நாடு திரும்பினர்

வெளிநாடுகளில் இருந்து மேலும் 29பேர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டிற்கு வரமுடியாமல் வெளிநாடுகளில் தங்கியிருந்த  இலங்கையர்கள் 29பேர்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டார் நாட்டில் தங்கியிருந்த இலங்கையர் 29பேரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  இன்று (புதன்கிழமை) காலை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இங்கிலாந்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் 3 பேர் நேற்று இரவு  நாட்டை வந்தடைந்தனர். இவர்களும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உலகமே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் ஒவ்வொரு நாடும் வெளிநாடுகளில் இருக்கும் தங்களது பிரஜைகளை அழைத்து வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கமும் வெளிநாடுகளிலுள்ள தங்களது பிரஜைகளை நாட்டுக்கே அழைத்து வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.