ஒரே ஓவரில் 10 பந்துகள் 22 ரன்கள்.. மோசமான சாதனை படைத்த லக்னோ வீரர்!
ஒரே ஓவரில் அதிக பந்துகளை வீசிய நபர் என்ற மோசமான சாதனையை படைத்தார் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வீரர் ஷமர் ஜோசப்.
நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக வென்றது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் விளையாடிய லக்னோ அணி, 20 ஓவரின் முடிவில் 161 ரன்களை சேர்த்து. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி, 15.4 ஓவரில் வெற்றி பெற்றது.
ஆனால் இந்த போட்டியில் மோசமான சாதனை படைத்துள்ளார் லக்னோ வீரர் ஒருவர். இந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக களமிறங்கினார் மேற்கிந்திய வீரர் ஷமர் ஜோசப்.
கொல்கத்தா அணிக்கு எதிராக பந்துவீச்சின்போது, முதல் ஓவரை வீசிய ஷமர் ஜோசப், 2 நோ பால், 2 வைட் பால் என மொத்தம் 10 பந்துகளை வீசினார்.
இதன் மூலம் முதல் ஓவரில் 10 பந்துகளை வீசிய அவர் சுமார் 22 ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்த போட்டியில் அவர் வீசிய 4 ஓவர்களில் மட்டும் சுமார் 47 ரன்களை அவர் விட்டுக்கொடுத்து, விக்கெட் ஏதும் இல்லாமல் தனது ஸ்பெல்லை முடித்தார்.
இவரின் இந்த மோசமான பந்துவீச்சு மூலம், ஐபிஎல் போட்டியில், ஒரு ஓவரில் அதிக பந்துகளை வீசிய நபர் என்ற மோசமான சாதனையையும் படைத்தார்.
அதேநேரம் கடந்த ஜனவரி மாதம், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.