ஒரு ஒவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்

ஒரு ஒவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்

நேபாளம் மற்றும் கட்டார் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ரி20 போட்டியில் நேபாள வீரர் அபார சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

நேபாள அணி துடுப்பெடுத்தாடிய 20ம் ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக விளாசி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

நேபாள அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திபேந்திர சிங் அய்ரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஒரு ஒவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் | Nepal Batsman Airee Smashes Six Sixes In An Over

ஓமானின் அல் அமராட் மைதானத்தில் நேற்றைய தினம் இந்தப் போட்டி நடைபெற்றது.

சர்வதேச ரி20 போட்டியொன்றில் ஓவரின் ஆறு பந்துகளுக்கும் சிக்ஸர்கள் விளாசிய மூன்றாவது வீரராக திபேந்திர சிங் அய்ரே பட்டியலில் இணைந்து கொண்டுள்ளார்.

கட்டார் அணியின் கம்ரான் கான் வீசிய 20ம் ஓவரின் அனைத்து பந்துகளும் சிக்ஸர்ளாக விளாசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு ஒவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் | Nepal Batsman Airee Smashes Six Sixes In An Over

இந்த போட்டியில் நேபாள அணி 32 ஓடடங்களினால் கட்டார் அணியை வீழ்த்தி வெற்றியீட்டியது.

இதற்கு முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இங்கிலாந்தின் ஸ்டுபவர்ட் போர்ட் வீசிய ஓவரின் ஆறு பந்துகளுக்கும் யுவராஜ் சிங் சிக்ஸர்களை விளாடசியிருந்தார்.

2021ம் ஆண்டு அன்டிகுவாவில் நடைபெற்ற ரி20 பபோட்டியில் இலங்கை வீரர் அகில தனஞ்சய வீசிய ஓவரின் ஆறு பந்துகளையும் மேற்கிந்திய தீவுகளின் கெரோன் பொல்லார்ட் சிக்ஸர்களாக விளாசியிருந்தார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் தென் ஆபிரிக்காவின் ஹேர்சல் கிப்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஜசகரன் மல்ஹோத்ரா ஆகியோர் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளனர்.