யாழில் 75 சாராயப் போத்தல்களுடன் சிக்கிய பெண்..!

யாழில் 75 சாராயப் போத்தல்களுடன் சிக்கிய பெண்..!

யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் பெண்ணொருவர் 75 கால் போத்தல்கள் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யாழில் 75 சாராயப் போத்தல்களுடன் சிக்கிய பெண் | Woman Caught With Liquor Bottlesஅவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.