யாழில் இடம்பெற்ற விபத்தில் பிரபல ஆசிரியரை இழந்த மாணவர்கள்

யாழில் இடம்பெற்ற விபத்தில் பிரபல ஆசிரியரை இழந்த மாணவர்கள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி உயிரிழந்துள்ளார்.

தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான கோண்டாவிலை சேர்ந்த கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் (வயது 56) என்பவரே இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் பிரபல ஆசிரியரை இழந்த மாணவர்கள் | Students Lost Famous Teacher In An Accident Yali

பாடசாலை ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக, நேற்றைய தினம் வியாழக்கிழமை கோப்பாய் – கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை உயிரிழந்த கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் யாழில். இந்து நாகரிகம் மற்றும் தமிழ் பாடங்களை உயர்தர மாணவர்களுக்கு கற்பிப்பதில் சிறந்தவராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.