அஸ்வெசும உதவித்தொகை வழங்கப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு

அஸ்வெசும உதவித்தொகை வழங்கப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு

மீதமுள்ள அஸ்வெசும நலன்புரி உதவித்தொகை ரூபாய் 2500, எதிர்வரும் திங்கட்கிழமை (15) வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று(11.04.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இதன்படி 182,000 குடும்பங்களுக்கு சுமார் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவுகள் அடுத்த புதன்கிழமைக்குள் (17) அனைவருக்கும் கொடுத்து முடிக்கப்படும்.

அஸ்வெசும உதவித்தொகை வழங்கப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு | Aswesuma Welfare Allocation 2500

கேகாலை, பொலன்னறுவை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் உள்ள பயனாளிகளுக்கான 'அஸ்வெசும' கொடுப்பனவுகள் சில தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எஞ்சிய அஸ்வெசும கொடுப்பனவுகளை செலுத்தியதன் பின்னர், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போது செலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவுகளையும் அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.