இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் காணொளிகளை பயன்படுத்தி நிதி மோசடி! அம்பலப்படுத்திய வீரர்

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் காணொளிகளை பயன்படுத்தி நிதி மோசடி! அம்பலப்படுத்திய வீரர்

இலங்கையின் மூத்த கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது எடிட் செய்யப்பட்ட காணொளி காட்சிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிகழ்நிலை நிதி மோசடியை அம்பலப்படுத்தியுள்ளார்.

உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் வழங்கிய நேர்காணலில் உள்ள குரல் பதிவை எடுத்து விளையாட்டை விளம்பரப்படுத்தும் காணொளியை தயாரித்துள்ளனர்.

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் காணொளிகளை பயன்படுத்தி நிதி மோசடி! அம்பலப்படுத்திய வீரர் | Financial Fraud Using Sri Lankan Cricketer Videos

இது தொடர்பில் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளதுடன், இதுவொரு மோசடியான செயல்பாடு என அம்பலப்படுத்தினார்.

“மக்களை ஏமாற்றி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் அல்லது தீங்கிழைக்கும் முயற்சி.” இது எனக் கூறியுள்ளார்.

இந்த மோசடி செய்பவர்கள் முன்னணி தொலைக்காட்சியிலிருந்து திருத்தப்பட்ட காணொளியை பயன்படுத்துகின்றனர்.

தயவு செய்து அத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடளிப்பதுடன் எச்சரியுங்கள் எனவும் கோரியுள்ளார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடளிப்பேன் என்றும் அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.