அதிரடி திருப்பங்களாக நடந்த மேட்ச்!! கடைசி பந்தில் ராஜஸ்தானை வென்றது குஜராத் டைட்டன்ஸ்

அதிரடி திருப்பங்களாக நடந்த மேட்ச்!! கடைசி பந்தில் ராஜஸ்தானை வென்றது குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்து விளையாடியது.

ராஜஸ்தான் தரப்பில் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களும், ஜாஸ் பட்லர் 8 ரன்களும் எடுத்தனர்.

கேப்டன் சஞ்சு சாம்சன் 68 ரன்களும், ரியான் பராக் 76 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ராஜஸ்தான் அணி 196 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி குஜராத் அணி வீரர்கள் விளையாடினர்.

தொடக்க வீரர் சாய் சுதர்சன் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க மேத்யூ வேட் 4 ரன்னும், அபினவ் மனோகர் 1 ரன்னும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சுப்மன் கில் 44 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தார்.

ராகுல் தெவாதியா 22 ரன்களும், ரஷித் கான் 11 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.

கடைசி பந்தில் வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதனை பவுண்டரிக்கு அனுப்பி ரஷித் கான் வெற்றி பெற வைத்தார்.

இந்த போட்டியை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.