திருக்கோணேஸ்வரர் ஆலய பிரம்மோற்சவத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரம்மோற்சவத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை  திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பிரம்மோற்சவத்தின்  தீர்த்தோற்சவம் இன்றையதினம்(10)  இடம்பெற்றது.

இன்றைய தீர்த்தோற்சவ நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, நாளைய தினம் (11) பூங்காவனத் திருவிழாவும், நாளை மறுநாள் (12) தெப்பத்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.