சுவிஸிலிருந்து யாழ். வந்தவர் திடீர் மரணம்

சுவிஸிலிருந்து யாழ். வந்தவர் திடீர் மரணம்

சுவிட்சர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (2024.04.10) 55 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் திங்கட்கிழமை (8) சுவிஸிலிருந்து நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள தாயாரின் வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (9) காலை குளியலறையில் குளிக்கச் சென்றவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

சுவிஸிலிருந்து யாழ். வந்தவர் திடீர் மரணம் | Person Jaffna Switzerland Fell Into Bathroom Died

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.