
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 809 ஆக உயர்வடைந்துள்ளது.
update..........
கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 175 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 2 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 807 ஆக உயர்வடைந்துள்ளது.
சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது.