விசா விதிகளை கடுமையாக்கும் நியூசிலாந்து
நியூசிலாந்து தனது நாட்டுக்கான வேலைவாய்ப்பு விசா (Work Visa) திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நேற்று (07) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட இடம்பெயர்வுகள் யாவும் 'நிலையற்றது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நியூசிலாந்து வேலைவாய்ப்பு விசா திட்டத்தில் மேற்கொண்டுள்ள மாற்றங்களாக, குறைந்த திறமையான வேலைகளுக்கு ஆங்கில மொழித் தேவையை அறிமுகப்படுத்துதல் மற்றும் பெரும்பாலான முதலாளி வேலை விசாக்களுக்கு குறைந்தபட்ச திறன்கள் மற்றும் பணி அனுபவ வரம்பை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் என்பவை காணப்படுகின்றன.
மேலும் குறைந்த திறமையான வேலைவாய்ப்புகளுக்கு அதிகபட்ச தொடர்ச்சியான தங்கும் காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு, சுமார் 173,000 பேர் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியா புலம்பெயர்ந்தோரில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, அடுத்த 2 ஆண்டுகளில் அந்த நாட்டில் புலம்பெயர்ந்தோரை உள்ளெடுக்கும் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.