தந்தை மகனுக்கு இடையில் மோதல் ; பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
மாவனெல்ல - பதியதொர பகுதியில் அமைதியற்ற வகையில் செயற்பட்ட நபரை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்
தந்தை - மகன் ஆகியோருக்கு இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக 119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போது பொலிஸாரை சந்தேகநபர்கள் இருவரும் வாளால் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 53 வயதான தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதலுடன் தொடர்புடைய மகன் தப்பியோடியுள்ளார்.
சந்தேகநபர்களின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.