கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானம் : நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்!!

கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானம் : நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்!!

மஸ்கெலியா - நல்லதண்ணி பகுதியிலுள்ள லக்கசபான தோட்ட ஆலயமொன்றின் திருவிழாவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம் ஒவ்வாமை ஏற்படுத்தியதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது, நேற்று (07.04.2024) இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, வைத்தியசாலைக்கு அதிக நோயாளிகள் வருகை தந்ததன் காரணமாக அனைத்துப் பகுதியினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானம் : நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் | Maskeliya Temple Newsமேலும், நோயாளிகள் பலர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் எனவும், 28 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.