2024ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
2024ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்போது நிகழ்கிறது. அந்த நாளில் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
கிரகணம் என்பது வானியல் நிகழ்வாக இருந்தாலும் மதம் மற்றும் ஜோதிடத்தில் சிறப்பு முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.
சூரியன் என்பது ஆன்மாவாக இருந்து வரும் நிலையில், கிரகணம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைவரையும் பாதிக்கும் விதமாக இருக்கும்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 8, 2024இல் நிகழ்கிறது. இந்த கிரகணமானது இரவு 9.12 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.25 மணி வரை நீடிக்கிறது
ஏப்ரல் 8ஆம் திகதி சூரிய கிரகணமானது மேற்கு ஐரோப்பா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்டிக், வட அமெரிக்கா (அலாஸ்கா தவிர்த்து), கனடா, தெற்கு அமெரிக்கா, அயர்லாந்து பகுதிகளில் காண முடியும்
சூரிய கிரகணத்தின் போது சூரியனில் இருந்து தீங்கு விளைவிக்கும் கதிர்கள் வெளிப்படும் எனவும், இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது தவறான விஷயங்கள் எதையும் செய்யகூடாது
சூரிய கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இந்த காலகட்டத்தில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. தீங்கு விளைவிக்கும் கதிர்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல் அந்த நபருக்கு பல்வேறு வகைகளில் தீங்குகளை விளைவிக்கலாம்.
இந்தக் காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கத்தி, ஊசி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்
சூரிய கிரகணம் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கவே கூடாது. இது கண்களுக்கு தீங்கு விளைவிக்கும்
சூரிய கிரகணத்தின் போது உணவு சமைக்கவோ சாப்பிடவோ கூடாது. கிரகணத்தின் போது சமைக்கப்படும் உணவு அசுத்தமாக கருதப்படுகிறது.
உணவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்தால், சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டால் துளசி இலைகளை சேர்க்கலாம். இதனால் எதிர்மறை விளைவுகள் தவிரக்கப்படும் என நம்பப்படுகிறது
கிரகணத்தின் போது வீட்டில் அமர்ந்து இறைவனை வழிபட வேண்டும். கிரகணத்தின் போது இறைவனின் மந்திரத்தை உச்சரிப்பது நன்மை தரும்