
டெல்லி அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா... பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடம்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி டெல்லியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
தொடக்க வீரர் சுனில் நரேன் 39 பந்துகளில் தலா 7 பவுண்டரி, சிக்சருடன் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அங்கிரிஷ் ரகுவன்ஷி 54 ரன்களும், ஆன்ட்ரே ரசல் 41 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 272 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.
டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் 55 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்களும் எடுத்தனர்.
மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 17.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த டெல்லி அணி 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
39 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றிய சுனில் நரேன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.