175 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்

175 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 175 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 2,296 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை தற்போது கொரோனா தொற்று உறுதியானவர்களில் 498 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.