மதுபானங்களின் விலைகள் குறைக்கப்படமாட்டாது! மதுவரி திணைக்களம் அறிவிப்பு..!

மதுபானங்களின் விலைகள் குறைக்கப்படமாட்டாது! மதுவரி திணைக்களம் அறிவிப்பு..!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான மதுபானங்களின் விலைகள் குறைக்கப்படும் என தற்போது பரவலாகப் பரவி வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபானங்களின் விலையை குறைக்கும் நோக்கில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிக வரிகள் குறைக்கப்படும் என ஊடகங்களில் தற்போது செய்திகள் வெளியாகி வருவதாக மதுவரி திணைக்கள பேச்சாளர் சன்ன வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

எனினும் மதுபானங்கள் மீதான வரியை திருத்தியமைக்க கலால் திணைக்களம் அதன் தகுதியான அதிகாரமான நிதியமைச்சகத்திடம் இருந்து எந்த உத்தரவும் அல்லது அறிவுறுத்தலும் பெறவில்லை, எனவே மதுபானங்களின் விலை குறைக்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுபானங்களின் விலை குறைப்பு குறித்த செய்திகள் பொய்யானதும், அடிப்படை ஆதாரமற்றதுமாகும் என வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதிக விலை காரணமாக நாட்டில் மதுபான பாவனை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது.

எனினும் இந்த ஆண்டு இறுதிக்குள் திணைக்களத்திற்கு 232 பில்லியன் ருபாய் புதிய வருடாந்த இலக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மதுவரி திணைக்கள பிரதானி தெரிவித்திருந்தார்.

மதுபானங்களின் விலைகள் குறைக்கப்படமாட்டாது! மதுவரி திணைக்களம் அறிவிப்பு | Reduce The Price Of Liquor Festive Season Fakeஅத்துடன் 2023 ஜனவரி மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரியில் மதுபான உற்பத்தி 650,000 லீற்றர் குறைந்துள்ளதால் இந்த எண்ணிக்கையை அடைவது கேள்விக்குறியாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.