வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள செய்தி.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள செய்தி.

ஜோர்தானில் இலங்கை பணியாளர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கவில்லை என இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கொவிட் 19 பரவல் காரணமாக ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் சிலர், அல்பராக் கைத்தொழில்நகரில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க சென்ற வேளையில் அவர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது அவர்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் முறையிடச் சென்றிருந்தனர் எனினும் இதற்கு தீர்வுகள் எதுவும் வழங்கப்படாதநிலையில், குழப்பகரமாக செயற்பட ஆரம்பித்தநிலையில், அந்த நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் இந்த எதிர் நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த தங்களது கட்டளையின் அடிப்படையிலோ அல்லது முன்கூட்டியே திட்டமிட்டோ இடம்பெறவில்லை என்று, அங்குள்ள இலங்கைத் தூதரகம் விளக்கமளித்துள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனை தெரிவித்துள்ளது.