ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் மும்பை அணி பவுலிங்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 8 ஆவது லீக் போட்டியான ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இவ்விரு அணிகளும் இன்னும் ஒரு வெற்றியை பெறாத நிலையில் முதல் வெற்றியை பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த போட்டி ஐதராபாத்தில் தற்போது தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
முன்னதாக இரு அணிகளும் தலா 1 போட்டியில் விளையாடியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதேபோன்று ஐதராபாத் அணி கொல்கத்தாவுக்கு எதிரான மேட்ச்சில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
விளம்பரம்