பேஷன் டிசைனிங் கற்க சென்ற மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; 80 வயது தாத்தா செய்த காரியம்

பேஷன் டிசைனிங் கற்க சென்ற மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; 80 வயது தாத்தா செய்த காரியம்

ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பு கல்வியை கற்கும் 23 வயதுடைய மாணவி , பட்டப் படிப்புக்கு பயிற்சி பெற்றுக் கொடுப்பதற்காகக் கூறி தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை தொடரும் பாதிக்கப்பட்ட மாணவி , தனது படிப்பிற்குத் தேவையான திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்வதற்குத் தனது காதலன் மூலம் பிலியந்தலையிலுள்ள தொழிற்சாலை ஒனறுக்குச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது .

பேஷன் டிசைனிங் கற்க சென்ற மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; 80 வயது தாத்தா செய்த காரியம் | Fashion Designing Student Sexually Abusedமாணவியிடம் குறித்த தொழிற்சாலையின் 80 வயதுடைய உரிமையாளர் தவறான முறையில் நடந்துகொண்டதாக மாணவி தனது காதலனுக்குத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் காதலன் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.