திடீரென தீப்பிடித்த அரச பேருந்தால் பரபரப்பு

திடீரென தீப்பிடித்த அரச பேருந்தால் பரபரப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஒன்று குருணாகல் மல்கடுவாவ பிரதேசத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதம்பையிலிருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும் தீயினால் பஸ் சேதமடைந்துள்ளது.

திடீரென தீப்பிடித்த அரச பேருந்தால் பரபரப்பு | The Government Bus That Suddenly Caught Fire

அதன் பின்னர் அங்கு வந்த குருணாகல் தீயணைப்பு பிரிவினர் தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், பயணிகள் எவருக்கும் எவ்வித அசம்பாவிதம் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.