அதீத ஆசை... விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்

அதீத ஆசை... விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்

கொழும்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் நேற்றைய தினம் (25-03-2024) கொட்டாவ, ஹைலெவல் வீதியில் இடம்பெற்றுள்ளது.அதீத ஆசை... விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! வெளியான பல அதிர்ச்சி தகவல்கள் | Youth Died Accident In Colombo Imformation Release

குறித்த விபத்தில் இந்தாண்டு (2024) உயர்தரத்திற்கு தோற்றும் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான சஹான் திவந்த பெரேரா என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

சஹான், நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று தனது தாயாரிடம் காட்டிய பின் மீண்டும் திரும்பி வந்த போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

அதீத ஆசை... விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! வெளியான பல அதிர்ச்சி தகவல்கள் | Youth Died Accident In Colombo Imformation Release

மோட்டார் சைக்கிள் மீது அதிக ஆசை கொண்ட சஹான், அதை தனது தாயிடம் காட்டுவதற்காக அப்படி எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொட்டாவையில் இருந்து மாகும்புர நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதியின் குறுக்கே (யு-டர்ன்) வலதுபுறம் திரும்ப முற்பட்டபோது, ​​மாகும்புரவில் இருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற சஹான் வேனில் மோதியுள்ளார்.

அதீத ஆசை... விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! வெளியான பல அதிர்ச்சி தகவல்கள் | Youth Died Accident In Colombo Imformation Release

மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து கொட்டாவையில் இருந்து மாகும்புர நோக்கி பயணித்த கெப் வண்டியுடன் மோதியதில் சஹான் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வேன் மற்றும் கெப் வண்டியின் சாரதிகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.