அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் : வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு..!
அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,
"அரசு ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 5,000 கொடுத்துள்ளோம்.
ஏப்ரல் மாத சம்பளத்துடன் 10000 சேர்க்கப்படும். ஏப்ரல் 10-ம் திகதிக்குள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க தயாராக உள்ளோம்." என தெரிவித்தார்.