மாணவன் திடீர் உயிரிழப்பு; பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு

மாணவன் திடீர் உயிரிழப்பு; பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு

களனி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (25) காலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மாணவன் திடீர் உயிரிழப்பு; பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு | Sudden Death Of Student University Kelaniaகளனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சுகயீனமடைந்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க அம்பியூலன்ஸ் வசதியோ அல்லது வேறு வாகன வசதியோ பல்கலைக்கழகத்தில் இல்லாத காரணத்தால் மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.