பிரேசிலை தாக்கிய பாரிய புயல்: 10 பேர் பலி

பிரேசிலை தாக்கிய பாரிய புயல்: 10 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய புயலினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில்நேற்று முன்தினம் புயலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதோடு, ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டடுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

பிரேசிலை தாக்கிய பாரிய புயல்: 10 பேர் பலி | Massive Storm Hits Brazil 10 Dead

இந்நிலையில்100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதோடு, வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.