வீட்டு வறுமையை போக்க சவுதிக்கு சென்ற குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை..!
தனது வீட்டு வறுமை காரணமாக சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற குடும்ப பெண் ஒருவர், கடுமையான மனநோய் மற்றும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் நாடு திரும்பியுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
முக்குத்தொடுவையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான குமுதுனி சந்தியா குமாரி செனவிரத்ன என்ற தாயே இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர் ஆவார்.
குறித்த பெண் குருநாகல் பிரதேசத்தில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் ஊடாக 2023 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி வீட்டுப் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளார்.
சில மாதங்கள் முதல் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, தூங்குவதற்கு கூட வாய்ப்பில்லாமல் வேலை செய்து களைத்துப் போய், வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு சென்ற முதல் நாள், அவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார், குடும்ப உறுப்பினர்கள் பெண்ணை சவுதி மருத்துவமனையில் அனுமதித்தபோது, அங்கு பணிபுரிந்த ஒருவர் முக்குதொடுவ பகுதியைச் சேர்ந்த அவரது கணவருக்கு அந்தப் பெண் குறித்து தெரிவித்துள்ளார்.
இதன்படி பல மாதங்களாக மனைவி தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்காத கணவன் இந்த தகவலையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஹலவத்தை உப அலுவலகத்திற்கு பல தடவைகள் சென்று மனைவியை இலங்கைக்கு அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்தும் அது நடக்கவில்லை.
பின்னர் ஊடகங்கள் இதைப் பற்றி வெளிப்படுத்தத் தொடங்கின. பின்னர், இவர் கடந்த 19ஆம் திகதி சவுதி தூதரகத்தினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.