மகனுக்கு உத்வேகம் கொடுக்க தாய் செய்த செயல்; பலரை நெகிழ வைத்த சம்பவம்!
குருணாகலில் இளம் தாய் ஒருவர் தன் மகனுடன் சேர்ந்து மரதன் ஓட்டத்தில் கல்லந்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் அந்த தாய்க்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றது.
சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாயின் செயல் பிரமிக்க வைத்துள்ளது.
பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது.
இதன்போது, நான்கு கிலோமீற்றர் தூரத்தை தனது மகனுடன் சேர்ந்து ஓடிய தாய், பெற்றோருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார் இந்நிலையில் அந்த தாயின் செயலை பலரும் மெச்சியுள்ளதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்ட்க்ஹு வருகின்றனர்.