சுவிட்சர்லாந்திற்கு பாடசாலை நண்பியை காணச் சென்ற புலம்பெயர் தமிழர் நையப்புடைப்பு
சுவிஸ்லாந்தில் வசிக்கும் தன் பாடசாலை நண்பியை காண கனடாவாழ் தமிழர் ஒருவர் சென்ற நிலையில் , குறித்த ஆணும் பெண்ணும் பிரான்ஸ் வாழ் தமிழர் சிலரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட கணவனைப் பிரிந்து ஒரு பிள்ளையுடன் சுவிஸில் வாழ்ந்து வரும், பாடசாலை நண்பியை காண குறித்த நபர் சென்றபோதே தாக்குதலுக்கு ஆளானதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிசாரின் தகவலின்படி,
4 பேர் கொண்ட குழுவினரே அவர்கள தாக்கியுள்ளார்கள். தாக்குதல் மேற்கொண்டவர்கள், பிரான்சிலிருந்து பார்சல் வழியாக சுவிஸ்சுக்குள் ரயிலில் வந்துள்ளார்கள்.
அதன் பின் உள்ளூர் ரயிலில் சூரிச் வந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்கள். கனடாவிலிருந்து சுற்றுலாப் பயணியாக வந்த ஒருவரும் சுவிஸ் குடியுரிமையுள்ள பெண்ணுமே தாக்குதலு்ககு உள்ளாகியுள்ளார்கள்.
குறித்த பெண், தனது முன்னாள் கணவரின் துாண்டுதலின் பேரிலேயே தாக்குதல் நடந்துள்ளதாக பொலிசாருக்கு முறையிட்டுள்ளார். தாக்குதல் மேற்கொண்டவர்களில் ஒருவரை தனக்கு ஏற்கனவே தெரியும் எனவும், அவர் தனது முன்னாள் கணவரின் உறவினர் எனவும் பொலிசாருக்கு பெண் முறையிட்டுள்ளார்.
சூரிச் ஹிட்னாவ் பகுதியில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டுக்கு அத்துமீறி நுளைந்த 4 பேர் குறித்த பெண்ணையும் அவளுடன் தங்கியிருந்த ஆணையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்கள்.
தாக்குதலுக்குள்ளான ஆண் அடிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , பெண் காயங்களுக்கு சிகிச்சை பெற்றதாக தெரிவித்தபொலிஸார் , சம்பவத்தில் பெண்ணின் 7 வயது மகன் எந்தவித காயங்களும் இன்றி மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். அதேவேளை தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வவுனியாவை சொந்த இடமாக கொண்டவர்கள் என கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் கணவரை விவாகரத்து செய்து தனது 7 வயது மகனுடன் வாழ்ந்து வருகின்றார்.
தாக்குதலுக்குள்ளான கனடாவாழ் தமிழர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும், இருவரும் பாடசாலை நண்பர்கள் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் பெண் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுவிஸ் தகவல்கள் கூறுகின்றன.