லண்டனில் பிரபல நிறுவனத்தின் அதிரடி முடிவு : வேலை இழக்கப்போகும் 75 ஆயிரம் பேர்
உணவு மற்றும் பானங்கள், சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் அழகுப் பொருட்கள் உற்பத்தி செய்து வரும் லண்டனை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் யூனிலிவர் என்ற நிறுவனம் 75 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செலவினங்களை குறைக்கும் வகையில் யூனிலிவர் சில சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் இதன் காரணமாகவும் சில ஆயிரம் பேர் வேலைகளுக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனையை கைவிட யூனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளதால் 75 ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள் என்ற செய்தி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.