ரஷ்ய நகரம் ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் 9,000 குழந்தைகள்
ரஷ்ய நகரம் ஒன்றிலிருந்து, சுமார் 9,000 சிறுவர் சிறுமிகள் வெளியேற்றப்பட இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய நகரமான பெல்கோரோட் (Belgorod) மற்றும் அதைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களிலிருந்து சுமார் 9,000 சிறுவர் சிறுமிகள் வெளியேற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் குண்டு தாக்குதல் மேற்கொண்டிருப்பதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அப்பகுதி ஆளுனரான வியாசஸ்லாவ் கிளாட்கோவ் ( Vyacheslav Gladkov) தெரிவித்துள்ளார்.
அத்துடன் முதல் கட்டமாக மார்ச் மாதம் 22 ஆம் திகதி 1,200 பிள்ளைகள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.