லண்டனுக்கு பறந்துகொண்டிருந்த விமானம்... கழிவறையில் பயணியின் செயலால் அதிர்ச்சி!

லண்டனுக்கு பறந்துகொண்டிருந்த விமானம்... கழிவறையில் பயணியின் செயலால் அதிர்ச்சி!

தாய்லாந்தில் பாங்காக் நகரிலிருந்து லண்டன் நகர் நோக்கி புறப்பட்டு சென்ற விமானத்தில் பயணியொருவர் கழிவறைக்கு சென்று கதவை பூட்டு கொண்ட சம்பவம் ஒன்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லண்டனுக்கு பறந்துகொண்டிருந்த விமானம்... கழிவறையில் பயணியின் செயலால் அதிர்ச்சி! | Flight To London Passenger In The Toilet Shocked

லண்டனை நோக்கி புறப்பட்ட பி.ஆர்.67 என்ற எண் கொண்ட தனியார் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, பயணியொருவர் கழிவறைக்கு சென்று, உட்புறம் கதவை பூட்டி கொண்டு நெடுநேரம் திரும்பி வரவேயில்லை.

இதனால், ஊழியர் ஒருவர் சென்று என்னவென்று பார்த்துள்ளார். அப்போது, காயங்களுடன் அந்த பயணி கிடந்துள்ளார்.

உடனடியாக அந்த ஊழியர், விமானத்தில் இருந்த வைத்தியர் வைத்து, குறித்த பயணிக்கு முதலுதவி செய்துள்ளனர்.

லண்டனுக்கு பறந்துகொண்டிருந்த விமானம்... கழிவறையில் பயணியின் செயலால் அதிர்ச்சி! | Flight To London Passenger In The Toilet Shocked

இதன்பின் அவசர நடவடிக்கையாக, அந்த விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 17 நிமிடங்கள் முன்பாக லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் சென்றிறங்கியது.

அந்நபர் கழிவறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என தெரிய வந்துள்ளது. அந்த பயணி பின்னர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். 

இருப்பினும், அவருடைய அடையாளம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.