கனடாவில் மீண்டுமொரு கொடூர சம்பவம்... மனைவியை கொன்றுவிட்டு தாய்க்கு வீடியோ கால்!

கனடாவில் மீண்டுமொரு கொடூர சம்பவம்... மனைவியை கொன்றுவிட்டு தாய்க்கு வீடியோ கால்!

கனடாவில் இருந்து பஞ்சாப்பில் உள்ள தனது தாயிக்கு வீடியோ கால் செய்து மனைவியை கொலை செய்துவிட்டதாக சந்தேக நபர் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனடாவில் மீண்டுமொரு கொடூர சம்பவம்... மனைவியை கொன்றுவிட்டு தாய்க்கு வீடியோ கால்! | Video Call To Mother After Killing Wife In Canada

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்பிரீத் சிங் - பல்வீந்தர் கவுர் தம்பதிக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கனடாவில் படித்து வரும் தனது மகளுடன் பல்வீந்தர் கவுர் வசித்து வந்துள்ளார்.

இதேவேளை, ஜக்பிரீத் சிங் வேலையில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவி மற்றும் மகளை பார்க்க அவர் கனடா சென்றுள்ளார். 

கனடாவில் மீண்டுமொரு கொடூர சம்பவம்... மனைவியை கொன்றுவிட்டு தாய்க்கு வீடியோ கால்! | Video Call To Mother After Killing Wife In Canada

அப்போது அவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த பல்வீந்தர் கவுரை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கனடாவில் மீண்டுமொரு கொடூர சம்பவம்... மனைவியை கொன்றுவிட்டு தாய்க்கு வீடியோ கால்! | Video Call To Mother After Killing Wife In Canada

இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மனைவி பல்வீந்தர் கவுர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜக்பிரீத் சிங்கை கனடா பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இது தொடர்பில் ஜக்பிரீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில்,

அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாக இருந்து வந்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்