புஸ்ஸல்லாவை பகுதி மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சனைகள்!

புஸ்ஸல்லாவை பகுதி மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சனைகள்!

ஸ்ஸல்லாவை – நியூமெல்போர்ட் பகுதி மக்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சுத்தமான  குடிநீர் இன்றி மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கழிவு நீரையே குடிநீராக பயன்படுத்தும் நிலையில் இருக்கின்றனர்.

அரசாங்கத்தின் நிதியின் மூலம் நியூமெல்போர்ட் பகுதி மக்களுக்கு குடி நீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதும்  அந்தத் திட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நியூமெல்போர்ட் மக்களின் கோரிக்கைக்கு அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அரசியல்வாதியும் செவிசாய்க்கவில்லை.

இந்த விடயம் தொடர்பாக அரசியல்வாதிகளிடம் பல முறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரைக் காலமும் இந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை.

பல தேர்தல்களை சந்தித்துள்ள புஸ்ஸல்லாவை – நியூமெல்போர்ட் மக்கள் தாம் அளித்த வாக்குகளுக்கு பிரதியுபகாரமாக தமக்கு சுத்தமான குடிநீரைக்கூட இந்த அரசியல் தலைமைகள் பெற்றுக்கொடுக்கவில்லை என குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தாம் முகம் கொடுத்து வரும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக  புஸ்ஸல்லாவை – நியூமெல்போர்ட் பகுதி மக்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.