
மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம்!
நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், இரவு வேளைகளில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.