டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் புதிய விதி - ICC அறிவிப்பு
சர்வதேச ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையே பந்துவீசும் அணி எடுத்துக்கொள்ளும் நேரத்தை கட்டுப்படுத்த புதிய விதியை (ஸ்டாப் கிளாக்) ஐ.சி.சி.கட்டாயமாக்கி உள்ளது.
இந்த விதியை ஏற்கனவே சோதனை அடிப்படையில் ஐ.சி.சி அமல்படுத்தி இருந்தது.
புதிய விதிமுறைப்படி ஒரு ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்து வீசும் அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும்.
60 முதல் பூஜ்ஜியம் வரை எண்ணும் எலக்ட்ரானிக் கடிகாரம் திரையில் காட்டப்படும்.
இந்த நேரக்கட்டுப்பாட்டை 2 முறை மீறினால் பந்துவீசும் அணிக்கு 5 ஓட்டங்கள் அபராதமாக விதிக்கப்படும் என்ற புதிய விதியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இந்த விதி நடப்பாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கிண்ணத் தொடருடன் அமலுக்கு வர உள்ளது. அதன்பின் நடைபெற உள்ள அனைத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்த விதி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.