மொடலிங் மோகத்தால் நிர்வாண புகைப்படங்கள்; ஏமாந்த பெண்கள்; பொலிஸ் விசாரணையில் சிக்கிய நபர்

மொடலிங் மோகத்தால் நிர்வாண புகைப்படங்கள்; ஏமாந்த பெண்கள்; பொலிஸ் விசாரணையில் சிக்கிய நபர்

மொடலிங் துறைக்கு பெண்களை இணைத்துக் கொள்வதாகத் தனது முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்த சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி - இராஜவெல்ல பகுதியில் ,இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மொடலிங் மோகத்தால் நிர்வாண புகைப்படங்கள்; ஏமாந்த பெண்கள்; பொலிஸ் விசாரணையில் சிக்கிய நபர் | Nude Photos From The Modeling Crazeபாதிக்கப்பட்ட 15 பெண்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை (14) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தன்னை ஒரு வைத்தியராகக் காட்டிக்கொண்டு இளம் பெண்களை மொடலிங் துறைக்கு வேலைக்குச் சேர்த்துக் கொள்வதாகக் கூறி மோசடி செய்துளார். யுவதிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைச் சேகரித்து நேர்காணலுக்குப் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் , சந்தேக நபர் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து, அச்சுறுத்தியம விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.