ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : ஐபோன் 16 இன் வடிவமைப்பு வெளியானது..
ஐபோன் பிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் அடுத்த ஐபோனான iPhone 16 pro இன் வடிவமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இந்த புதிய ஐபோனில் வழக்கம் போல அதிக வலுவுடைய கமெரா, பின்புறத்திற்கான CAD திட்டங்கள், பொத்தான்கள் போன்றவற்றின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவிருக்கும் iPhone 16 pro வில் புதிய திட்டத்தில் கமரா அமைக்கப்படவுள்ளது, முன்னர் குறுக்காக அமைக்கப்பட்ட ஜோடி லென்ஸ்களுக்கு மாற்றமாக, ஐபோன் 16 கமராக்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக பொருத்தப்படவுள்ளது.
மேலும் ஃபிளாஷ் பிரதான மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ்களின் பக்கத்தில் அமர்ந்திருப்பது போல் வடிவமைக்கப்படவுள்ளது.
இந்த வடிவமைப்பில் முக்கிய அம்சங்களில் ஒன்று அப்பிளின் கலப்பு ரியாலிட்டி ஹெட்செட் விளங்குகிறது, இதன் மூலமாக அப்பிள் விஷன் ப்ரோ ஸ்டீரியோஸ்கோபிக் காணொளிகளை (stereoscopic videos) இயக்க முடியும் என கூறப்படுகிறது.
ஐபோன் 16 இன் பின்புற தட்டின் CAD காட்சியை மட்டுமே வெளியிட்டுள்ளது, எனவே பல வடிவமைப்பு குறிப்புகள் முழுமையாக தெரியவில்லை, ஆனால் வடிவமைப்பின் விளிம்பில் சாதனத்தின் பகுதிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு பொத்தான்கள் காணப்படுகிறது.
ஐபோன் 15 ப்ரோவில் அறிமுகப்படுத்தப்பட்ட செயல் பொத்தான், இரண்டு வால்யூம் பட்டன்களுக்கு மேலே பார்க்க முடியும், அதேபோல் ஐபோன் 16 இன் எதிர் பக்கத்தில் நான்காவது பொத்தானைக் காணமுடியும்.
இது கப்சர் பொத்தான் (Capture Botton) என்று பெயரிடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது, இது கொள்ளளவு கொண்டதாக இருக்கலாம் என்று சில விவாதங்களும் இடம்பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.