ராஜாங்கனையில் நாளை அஞ்சல்மூல வாக்களிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பினை நாளைய தினம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது
இதன்படி நாளைய தினம் முற்பகல் 9மணி முதல் பிற்பகல் 4 மணி வரையான காலப்பகுதியில் குறித்த அஞ்சல் மூல வாக்களிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
ராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவின் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் வலயக்கல்வி காரியாலயம் ஆகிய இடங்களில் குறித்த அஞ்சல் மூல வாக்களிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவுக்கான வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த பணிகள் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.