பட்டினியால் உயரிழக்கும் காசா மக்கள்: பைடன் விடுத்த உத்தரவு
காசாவுக்கு நிவாரணப்பொருட்களை கொண்டு செல்வதற்காக அதன் கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு தனது இராணுவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
காசாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரினால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், காசாவுக்கான உணவு, தண்ணீர், மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் செல்லும் பாதையை இஸ்ரேல் மூடியது.
இந்நிலையில், அங்கு கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பலர் பசி பட்டினியால் வாடி வருவதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும், சா்வதேச நாடுகளின் முயற்சியில் அவ்வப்போது அந்தப் பகுதிக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டாலும், தொடா் போரால் அந்தப் பகுதியில் உணவு உள்ளிட்ட பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் பஞ்சம் ஏற்பட்டு மிகப் பெரிய உயிரிழப்புகள் ஏற்படுமென ஐ.நா. தொடா்ந்து எச்சரித்து வந்த நிலையில் தற்போது 20 போ் பட்டினியால் உயிரிழந்ததாக காசா அதிகாரிகள் நேற்றைய தினம் அறிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காசாவுக்கு நிவாரணப்பொருட்களை கொண்டு செல்வதற்காக அதன் கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.