பிரித்தானியா செல்லக் காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய தகவல்..!
பிரித்தானியாவின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் (UEA) வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன் மூலம் திறமையான வெளிநாட்டு மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், மானிடவியல், பொறியியல், அறிவியல், கலைகள், சட்டம் மற்றும் பல துறைகள் காணப்படுகின்றது.
பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான இது வெளிநாட்டு மாணவர்களுக்காக பல்வேறு கல்வித் துறைகளில் புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கல்வி உதவித்தொகை வாய்ப்பு 2024-2025 கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்புகளைத் தொடங்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
£4,000 பவுண்டுகள் கல்வி உதவித்தொகை வெளிநாட்டு முதுநிலை மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது கல்வி உதவித்தொகை திட்டத்தின் நுழைவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு தானாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.