திருக்கோணேஸ்வரம் சிவராத்திரி நிகழ்வு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு..!

திருக்கோணேஸ்வரம் சிவராத்திரி நிகழ்வு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு..!

இடைக்கால நிர்வாக சபையிடம் நிர்வாகத்தை கையளித்து சிவராத்திரி நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பதிவாளருக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பானது, இன்று (07.03.2024) வியாழக்கிழமை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவால் வழங்கப்பட்டுள்ளது.

திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை தடைசெய்யும் வகையில், திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் கடந்த மாதம் 21ஆம் திகதி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதற்கமைய, நிர்வாகத்திற்கு இடைக்கால தடைவிதித்து கட்டாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், இடைக்கால நிர்வாகத்தினை நியமிப்பதற்கான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, குறித்த வழக்கானது நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது நிர்வாக சபைக்கு எதிராக வழங்கிய கட்டாணையானது மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது.

மேலும், திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக சபை ஒன்று நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

திருக்கோணேஸ்வரம் சிவராத்திரி நிகழ்வு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு | Judgement Regarding Sivarathri Thhirukoneshwaram