இரண்டு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

இரண்டு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், பாதாள உலக உறுப்பினர்கள், சட்டவிரோதமாக நிதி திரட்டுவோர் தொடர்பாக அறிவிப்பதற்கு இரண்டு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.

அதன்படி 1997, என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு போதைப்பொருள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கக் கூடிய விடயங்கள் பாரிய அளவிலான மோசடிகள் திட்டமிட்ட குற்றச்செயல்களை புரிவோர். கப்பம் பெறல் போன்ற விடயங்கள் குறித்த தகவல்களை வழங்க முடியும்.

மற்றைய தொலைபேசிய இலக்கம் 1917 ஆகும். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர். நிதி மோசடிகளை மேற்கொள்வோர், மற்றும் சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பாக தகவல்கள வழங்க முடியும். மற்றும் புலமைச் சொத்துக்கள் தொடர்பான தகவல்களையும் வழங்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.