புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன்...இலங்கை தமிழ் நடிகையை மிரட்டும் புலப்பெயர்ந்த இளைஞன்!

புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன்...இலங்கை தமிழ் நடிகையை மிரட்டும் புலப்பெயர்ந்த இளைஞன்!

புலம்பெயர்ந்த நாட்டில் வசிந்து வரும் முன்னாள் காதலன் தனக்கு பணம் தரவில்லையென்றால் தனது நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பதாக இலங்கையின் பிரபல தமிழ் நடிகை ஒருவர் பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன்...இலங்கை தமிழ் நடிகையை மிரட்டும் புலப்பெயர்ந்த இளைஞன்! | Migrant Youth Blackmails Sri Lankan Tamil Actress

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

குறித்த இலங்கை நடிகையும் வெளிநாட்டில் உள்ள அவரது காதலனும் சுமார் 4 ஆண்டுகளாக தொடர்பு கொண்டிருந்ததாகவும், பின்னர், பிரபலமடைந்ததையடுத்து நடிகை உறவை முறித்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன்...இலங்கை தமிழ் நடிகையை மிரட்டும் புலப்பெயர்ந்த இளைஞன்! | Migrant Youth Blackmails Sri Lankan Tamil Actress

இதனால், கோபமடைந்துள்ள முன்னாள் காதலன் இலங்கை நடிகையை பழிவாங்குவதற்காக, நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி பணம் பறிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாட்டில் உள்ள முன்னாள் காதலன், முறைப்பாடு பதிவு செய்ய நடிகைக்கு பல கணக்கு எண்களை அனுப்பி, புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதைத் தவிர்க்க பணம் வரவு வைக்குமாறு மிரட்டியுள்ளார்.

புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன்...இலங்கை தமிழ் நடிகையை மிரட்டும் புலப்பெயர்ந்த இளைஞன்! | Migrant Youth Blackmails Sri Lankan Tamil Actress

இதனால் பயந்து போன நடிகை, அதில் சில கணக்குகளிற்கு பணம் வைப்பு செய்துள்ளதாக இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளை கோருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய நீதவான், விசாரணைகளை முடித்து நீதிமன்றத்திற்கு உண்மைகளை தெரிவிக்குமாறு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.